Thursday, March 26, 2009

சின்ன பிள்ளையாய் இருக்கும்போது எழுபது காசுக்கு சினிமா டிக்கட் எடுத்து பெஞ்சில் படுத்துகொண்டே படம் பார்த்தபோது, உயர்ந்த விலை டிக்கட் {சோபா} ஒன்னரை ரூபா. இப்ப அந்த தியேட்டரே இல்ல. ஆனா இப்ப மதுரையில சாதரணமா அம்பது ரூபா டிக்கட்டுக்கு ஆகுது. கேளிக்கைக்கு விலை இத்தனை மடங்கு ஏறி இருக்கு. இதே அளவு விலை ஏற்றம் எல்லாத்துக்கும் பொருந்துமா? இதெல்லாம் எப்பிடி தீர்மானிக்கப்படுது? யாரால? இதோட சூட்சுமம் என்ன? இந்த பண விவகாரத்தை பத்தி நாம நெறைய பேசலாம்.