ஆக சரியான ஆயுள் காப்பீட்டு தொகையை எப்படிக் கணிப்பது?
இது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும் மூன்று முக்கியமான வழிகளைப் பார்க்கலாம்.
1. வருவாய் பதிலீடு அணுகுமுறை ( Income Replacement Approach)
இது ஒரு எளிதான அணுகுமுறை. இதில் கணக்கில் எடுக்கப்படும் விடயங்கள் என்ன?
- வயது, தற்போதைய நிகர வருமானம்
- தற்போதைய ஆயுள் காப்பீடு
- மீதமுள்ள வருமானம் ஈட்டக்கூடிய வருடங்கள்
- பதிலீடு செய்ய வேண்டிய வருமான விகிதம்
2. செலவு அணுகுமுறை ( Expense Approach)
இது கொஞ்சம் அதிகமானவற்றை கணக்கில் எடுக்கும் முறை.
- தற்போதைய வருமானம் ( வருமானம் ஈட்டும் திறன்)
- எதிர்கால வாழ்நாள் செலவு ( பணவீக்கத்தையும் சேர்த்தே கணக்கிடப்படும்)
- எதிர்பார்க்கப்படும் சேமிப்பு
- கிடைக்கக்கூடிய ஓய்வூதியம்
3. இரட்டை அணுகுமுறை ( Hybrid Approach)
முன்னால் பார்த்த இரண்டையும் சேர்த்து, முழுமையான ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் அணுகுமுறை. இதில் முக்கியமானது மனித ஆயுள் மதிப்பு ( Human life Value). வார்ட்டனைச் (Wharton School of Business) சேர்ந்த சாலமன் எஸ். ஹுப்னர் ( Solomon S. Huebner), 1920 களில் இதைப் பிரபலப் படுத்தியதன் மூலம் ஆயுள் காப்பீட்டை அறிவியல் ரீதியாக அணுக வழி ஏற்படுத்தினார். வருமானம் ஈட்டுபவரின் இறப்பினால் ஒரு குடும்பம் எதிர்காலத்தில் எவ்வளவு பணம் இழக்கும் என்பதைக் கணக்கிடுவதே இந்த அணுகுமுறையின் மையப் புள்ளி.
- வருமானம்
- செலவு
- மீதமுள்ள வருமான காலம்
- எதிர்காலத் தேவைகளின் மதிப்பு ( பணவீக்கத்தையும் சேர்த்து கணக்கிடுவதன் மூலம் வரும் தொகை)
பிறகு இவற்றையும் தாண்டிப் பல காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டன. ஆனாலும் ஒருவர் தனது வயதிற்கேற்ப ஆயுள் காப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்து கொண்டேயிருக்கவேண்டும். ஏனென்றால் ஒருவரின் பொருளாதார நிலை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருப்பதினால்.
4 comments:
theory is ok. But lot of tools are provided in finanical website and other bank site. whether they are following this..
Covering your life is highly a personal decision. An expert can only guide you. The thing here is whether the expert is unbiased. If you know these basics you can at least know his intentions.
is there any formula which includes the
Current income --- in linear order
expense --- exponential order with inflation to derive the future money requirement for N number of years.
Then based on that derive the premium, then that premium can be compared with other investment returns?
Future money requirement can be calculated taking in to account the inflation. But Life insurance is different from investments. Pure term insurance premium only covers your life. Don't compare investments through life insurance (ULIPs, Moneyback policies) with other investments. Because in these policies part of the premium goes to life cover and the rest to investments less the commission paid to agents and other expenses.
Post a Comment