துக்ளக்கின் கட்டுரைகளில் S. குருமூர்த்தியின் நிதிப் பார்வை மிக ஆழமானது. அதிலிருந்து சில.
- 2008 ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், அவசர அவசரமாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், பெரிய அளவில் பெரிய கம்பெனிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வரிவிலக்கு அறிவித்தார். அது அன்றைய தேவை. அதன் காரணமாக, 2007 - 2008 ல் ரூ. 1.24 லட்சம் கோடியாக இருந்த எக்சைஸ் வருமானம், ஆண்டுக்காண்டு சாதாரணமாக உயருவதற்கு மாறாக, 2008 - 2009 ல் 1.04 லட்சம் கோடியாகக் குறைந்தது.
- வரி வருமானம் என்பது, வரிகளை உயர்த்தாமலேயே, பொது உற்பத்தி (GDP) உயர்வதன் காரணமாகவும்,விலைவாசி உயர்வதன் காரணமாகவும், தானே அதிகமாகும். உதாரணமாக, சென்ற ஆண்டு சோப் விலை ரூ. 10 என்று வைத்துக்கொள்வோம். இந்த ஆண்டு அதன் விலை ரூ. 12 என்று உயர்ந்தால், சோப்பின் மேல் 10 சதவிகிதம் வரி என்கிற அடிப்படையில், சென்ற ஆண்டு வரி ரூ. 1, என்பது இந்த ஆண்டு, ரூ. 1.20 என்று தானாகவே உயரும். அதுபோல சோப் உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்தால், வரி அதன் அடிப்படையில் மேலும் பத்து சதவிகிதம் உயரும். ஆகவே, சோப்பின் மீது வரியை உயர்த்தாமலேயே, சோப்பின் மூலமாகக் கிடைக்கும் வரி 20 சதவிகிதம் உயரும்.
- இப்படி 2008 - 2009 ல் வரியைக் குறைத்ததால், எக்சைஸ், சுங்க வருமானம், மேலே கூறியபடி குறைந்தது. அடுத்த 2009 - 2010 ஆம் ஆண்டிலும், எக்சைஸ் வருமானம் ரூ. 1.04 லட்சம் கோடி என்றும், சுங்க வரி ரூ.0.83 லட்சம் கோடி என்றும் குறைந்தே இருந்தன. அதாவது 2007 - 2008 லிருந்து, 2009 - 2010 வரை, எக்சைஸ் மற்றும் சுங்க வரி வருமானம் உயரவில்லை. மாறாகக் குறைந்தன. 2007 - 2008 ல் ரூ. 2.28 கோடியாக இருந்த வருமானம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009 - 2010 ல் ரூ. 1.87 லட்சம் கோடியாகக் குறைந்தே இருந்தது.
- 2007 - 2008 ல் ரூ. 48.86 லட்சம் கோடி என்றிருந்த நாட்டின் உற்பத்தி (GDP), 2009 - 2010 ல் ரூ. 65.50 லட்சம் கோடி என்று 34 சதவிகிதம் உயர்ந்தது. அப்படி விலைவாசியும் உற்பத்தியும் சேர்ந்து 34 சதவிகிதம் உயர்ந்தாலும், வரிகள் உயர்வதற்கு மாறாக 18 சதவிகிதம் குறைந்தது.
- இந்தக் கணக்குப் படி, வரிவிலக்கின் மூலமாக பெரிய கம்பெனிகளுக்கும் பெரிய வியாபாரிகளுக்கும் 2009 - 2010 ல் ரூ. 1.28 லட்சம் கோடி வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
- கம்பெனிகளின் லாபம் 2008 - 2009 ல் குறைந்தது உண்மை. ஆனால், 2009 - 2010 ல் லாபம் அதிரடியாக உயர்ந்தது. 2006 - 2007 ல் கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகளின் லாபம் ரூ. 7.12 லட்சம் கோடியாக இருந்தது. 2008 - 2009 ல் இது ரூ. 6.68 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆனால் 2009 - 2010 ல் ரூ. 8.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது பொருளாதார நெருக்கடிக்கும் முன்னால் கம்பெனிகள் ஈட்டிய லாபத்தை விட 16 சதவிகிதம் அதிகம். ஆகவே, கம்பெனிகள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரிவிலக்கு 2009 - 2010 லும் தொடர எந்தவிதமான நியாயமும் இல்லை. அது 2009 - 2010 ல் மட்டுமல்லாமல், தற்போது சமர்ப்பிக்கப் பட்டிருக்கும் பட்ஜெட்டிலும் (2010 - 2011), இந்த வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருப்பது நியாயமே இல்லை.
- அப்படி, 2008 - 2009 ல், உற்பத்தியைக் குறைக்கக் கூடாது, நஷ்டம் அடையக்கூடாது, அதனால் நாட்டின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக அளிக்கப் பட்ட வரிவிலக்கை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2010 -2011) நியாயமாக விலக்கியிருந்தால், எவ்வளவு வரி வருமானம் அடுத்த ஆண்டு கூடும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா? ரூ. 1 லட்சம் கோடி.
No comments:
Post a Comment